தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செம்மரம் கடத்திய 2 பேர் கைது

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செம்மரம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.7.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் எல்.பி.நகர் என்ற இடத்தில் காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற உமாசங்கர், அஜித்குமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் மறைத்து வைத்திருந்த ரூ.7.20 லட்சம் மதிப்புள்ள 136 கிலோ செம்மரக்கட்டைகளை கைப்பற்றி தெலுங்கானா போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Telangana ,Hyderabad ,kidnapping , Telangana
× RELATED சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர்