குடியுரிமை சட்டத் திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு

மும்பை: குடியுரிமை சட்டத் திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரசை சேர்ந்த அமைச்சர் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நிராகரிப்பார் என்று காங்கிரசை சேர்ந்த அமைச்சர் நிதின்ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த சிவசேனை, மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர்களை போலீஸ் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி விரட்டியது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் டிச.16ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>