திருச்சி மேயர் பதவி 30 வருடமாக பெண்களுக்கு ஒதுக்குவது தான் சுழற்சி முறையா? கே. என். நேரு குற்றச்சாட்டு

திருச்சி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2011 மக்கள் தொகைப்படி நடக்கவில்லை, திருச்சி மேயர் பதவி இதுவரை பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் சுழற்சி முறையா என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தி உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ஒன்றியங்களை மையப்படுத்தி வாக்கு எண்ணும் மையம் வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தலில் அதிகாரிகளும், காவல்துறையும் ஒத்துழைப்பு வழங்கினால் போதும். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவதை அரசுதடுக்க வேண்டும். திருச்சி மாநகரில் மேயர் பதவி சுழற்சி முறையை பின்பற்றபடாமல் 30 வருடமாக பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இது என்ன சுழற்சி முறை என்பதே தெரியவில்லை. திருச்சி மாவட்டத்தில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிமுக செய்யும் தவறுக்கு சட்ட பாதுகாப்பு கேட்டுதான் கோர்ட்டுக்கு போகிறோம். 96ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடக்கிறது என நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். ஆனால் 2011 மக்கள் தொகைப்படி தேர்தல் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: