×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அமைச்சர் அறிவிப்பு

மும்பை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரசை சேர்ந்த அமைச்சர் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நிராகரிப்பார் என்று காங்கிரசை சேர்ந்த அமைச்சர் நிதின்ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த சிவசேனை, மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Maratha State ,Congress Minister , Minister of Citizenship Law, Maratha State, Congress
× RELATED கொரோனாவால் ஓரம் கட்டப்பட்டு இருந்த...