இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன், சிறு குறு, நடுத்தர தொழில்களுக்குத் தேவையான நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாகவும், கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்கும் வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத்துறைக்கு மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடி கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: