பருவதமலையில் தனுர்மாத உற்சவத்தையொட்டி கிரிவலப் பாதையை கலெக்டர் ஆய்வு

*பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்ய உத்தரவு

கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் தென்கையிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த மலை ஸ்ரீபர்வதமலை அமைந்துள்ளது. இம்மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது. இம்மலை சுமார் 4560 அடி உயரம் கொண்டது. இந்த மலை உச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்ற மல்லிகாஜூர்னேஸ்வரர் சுவாமி சிவன் கோயில் உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பர்வத மலையில் மார்கழி மாத தனூர்மாத உற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வருகிற 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

 இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே பக்தர்கள் கரைகண்டீஸ்வரர் கோயிலில் ெதாடங்கி, கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கிஸ்வரர் வடகாலி அம்மன் கோயில் வழியாக சுமார் 22 கிலோ மீட்டர் பக்தர்கள் கிரிவலம் வர உள்ளனர். இந்நிலையில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று கிரிவலப்பாதையை ஆய்வு செய்தார். தனுர்மாத உற்சவத்தில் கிரிவலம் வரும் பக்தர்கள் வசதிக்காகமின்விளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கிரிவல பாதை வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளதால், அதற்கு ேதவையான அனைத்து  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பர்வதமலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பக்தர்களுடன் கலெக்டரும் அன்னதானம் சாப்பிட்டார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஜெயசுதா உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

கிரிவலத்தின் மகிமை

பர்வத மலையில் ஒவ்வொரு நாளும் கிரிவலம் வந்தால் பல்வேறு பலன்கள் கிட்டும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை கிரிலம் வந்தால் கடன் தீரும். திங்கட்கிழமை, பதவிகிட்டும், செவ்வாய்கிழமை, பகைவரை எளிதில் வெல்வர். புதன்கிழமை இறைவனின் முழு கருனையும், அருட்சுவாட்சம் கிடைக்கும், வியாழன்-மிகுந்த சந்தோஷம், வெள்ளி- புத்திரபாக்கியம், செல்வம் கிடைக்கும், சனி- மூன்று லோகங்களையும் வணங்கக்கூடிய நன்மை ஏற்பட்டு இறைவனுடன் சேர்தல்.

Related Stories: