நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? டிச.18-ம் தேதி அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட நிர்பயாவின் பெற்றோர் கோரிய மனுவின் மீதான விசாரணை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு ரோட்டில் வீசப்பட்டார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

நிர்பயா என பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணின் பலாத்கார கொலை வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சீர்திருத்த பள்ளியில் 3 ஆண்டு தண்டனை முடித்ததால் விடுவிக்கப்பட்டான். ராம் சிங் என்ற குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரின் மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி நிராகரித்தது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட நிர்பயாவின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற அறிவிப்பு குறித்து பேசிய நிர்பயாவின் தாயார், 7 ஆண்டுகளாக பொறுத்த நாங்கள், மேலும் ஒரு வாரம் காத்திருக்க தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Related Stories: