பிரிட்டனில் கன்சர்வேடிங் கட்சி வெற்றி: மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் போரிஸ் ஜான்சன்; மோடி வாழ்த்து

பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிங் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்னை இடங்களை கன்சர்வேடிங் கட்சி கைப்பற்றியுள்ளதை அடுத்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 350 தொகுதிகளை கன்சர்வேடிங் கட்சி கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சியான தொழில்கட்சி 201 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி காரணமாக எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 31ம் தேதி முடிந்தது. அப்போது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த பிரெக்சிட் மசோதா தோல்வியடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை ஐரோப்பிய யூனியன் ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது.

இதுவே, இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இதனால், இந்த மசோதாவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். அதன்படி, நேற்று நடந்தது.காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக பொதுத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில 326 எம்பி.க்களுடன் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிறகட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சி அமைக்கலாம். இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி 350 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே உறவு மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>