அசாமில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் : ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து?

புதுடெல்லி: அசாமில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதா இரண்டு அவையிலும் வெற்றி பெற்றதால், அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் டிச.15-ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு நடைபெற இருந்தது.

Related Stories: