×

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் : போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை; ராஜினாமா செய்தார் ஜெர்மி கோர்பைன்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலையில் உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 31ம் தேதி முடிந்தது. அப்போது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த பிரெக்சிட் மசோதா தோல்வியடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை ஐரோப்பிய யூனியன் ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது.

இதுவே, இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இதனால், இந்த மசோதாவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். அதன்படி, நேற்று நடந்தது.காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக பொதுத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில 326 எம்பி.க்களுடன் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிறகட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சி அமைக்கலாம். இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும் தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார்.

Tags : election ,British ,Boris Johnson ,Jeremy Corbyn ,Conservative Party ,Opposition ,Parliamentary , Boris Johnson, Jeremy Corbyn, Leader of the Opposition, UK Parliamentary Election
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்