குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : 4 மாவட்டங்களில் போலீஸ் ரகசிய விசாரணை

சென்னை: குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கிறிஸ்டோபரின் வாட்ஸ் அப் குழு மூலம் வீடியோவை பகிர்ந்து பதிவிறக்கம் செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஐ.பி. அட்ரஸை வைத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. திருச்சியில் மட்டும் 60 பேர் கொண்ட பட்டியலை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

ஆபாச படங்கள் பார்ப்பதில் உலகிலேயே இந்தியாதான் நம்பர் 1 இடத்தில் உள்ளது என்று எப்.பி.ஐ. (பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி) மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 3,000 பேரின் பட்டியல் எடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை ஐ.பி. முகவரியை வைத்து யார் யாரெல்லாம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தது.

இந்த பட்டியலில் திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42), குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை அதிகம் பார்த்ததுடன், அதனை வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரது பேஸ்புக், வாட்ஸ்அப்பை நேற்றுமுன்தினம் இரவு திடீரென முடக்கினர். பின்னர் நேற்று காலை அவரது வீட்டுக்கு கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் அதிரடியாக சென்று மடக்கினர்.

போக்சோ சட்டப்படியும், ஐ.டி.ஆக்ட் 2000 படியும் வழக்குப்பதிந்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் கிறிஸ்டோபரை ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி வனிதா விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஐ.பி. முகவரியை கொண்டு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: