குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்,..சட்டம் அமலானது

புதுடெல்லி: குடியுரிமை சட்ட மசோதா இரண்டு அவையிலும் வெற்றி பெற்றதால், அதற்கு குடியரசு தலைவர் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜ கட்சி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடந்த புதன் கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்கள் அவையிலும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், பௌவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறித்தவர்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

Related Stories: