மகாராஷ்டிரா ஐ.பி.எஸ். அதிகாரி ராஜினாமா

மும்பை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா ஐ.பி.எஸ். அதிகாரி அப்துல் ரஹ்மான் ராஜினாமா ெசய்தார். இதுபற்றி அப்துல் ரஹ்மான் கூறியதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கும் விரோதமானது. இந்த மசோதா சாதி மற்றும் மதம் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம்கள் உட்பட நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இந்த மசோதா பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது. மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மதம் அடிப்படையாக இருக்கக்கூடாது. இ்ந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15 மற்றும் 25வது பிரிவுகளுக்கு எதிரானது. இவ்வாறு அப்துல் ரஹ்மான் கூறினார்.

Related Stories: