பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி

தண்டையார்பேட்டை:  தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பழனியம்மாள் (30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பழனியம்மாள் அலறி கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் (35) என்பதும், பழனியம்மாளுடன் பள்ளியில் படித்தவர் என்றும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.


Tags : Asami Dandayapettai ,Asami , Dandayapettai, sexual harassment, dharmicidam for Asami
× RELATED போச்சம்பள்ளி அருகே பரபரப்பு செல்போன்...