×

போலி ஆதார் கார்டு தயாரித்து 1 கோடி நிலம் அபகரித்தவர் கைது

சென்னை: மும்பையை சேர்ந்த திலகா என்பவர் கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை புழல் அருகே உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 2,400 சதுரடி காலி நிலத்தை, எனது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து சிலர் அபகரித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கொளத்தூரை சேர்ந்த அந்தோணி ராஜ் (60), பல ஆண்டுகளாக காலியாக இருந்த திலகாவுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பு நிலத்தை திலகாவை போல் போலியாக ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்தோணி ராஜை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.


Tags : land , Fake Aadhaar card, manufactured , extorted 1 crore land, arrested
× RELATED அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்