×

வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் மோசடி தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை தலைமை செயலகத்திற்கு ேநற்று வந்த வாலிபர், கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து தண்ணீர் ஊற்றி மீட்டனர். பிறகு அந்த வாலிபரை கோட்டை போலீசாரிடம்  ஒப்படைத்தனர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சிவராஜ் (29) என்பதும், பட்டதாரியான இவர் தலைமை செயலகத்தில் வேலை செய்து வரும் இளங்கோவன் என்பவர், தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் வாங்கினார்.

ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தலைமை செயலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : headquarters ,plaintiff ,Secretariat , 3 lakh scam, before Secretariat, plaintiff
× RELATED வேளச்சேரியில் வனத்துறை தலைமையகம்