எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி ரயில் நாளை இயக்கம்

சென்னை: பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜின் நாளை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 12.15 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மதியம் 12.45 மணிக்கு கோடம்பாக்கத்தில் புறப்பட்டு 2 மணிக்கு எழும்பூர் வந்தடையும். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 300, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய ₹600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவுகளுடன் சேர்த்து ஒரு மார்க்கத்திற்கு 565, இரண்டு மார்க்கத்திற்கு 865 கட்டணம் செலுத்த வேண்டும்.

பெரியவர்கள் ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 500, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய 1000, உணவுடன் சேர்த்து ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 765, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய 1265 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்களில் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.


Tags : Egmore - Kodambakkam ,Egmore , Egmore - Kodambakkam, traditional steam train, tomorrow's movement
× RELATED அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்