படியில் பயணித்தபோது ரயிலில் இருந்து விழுந்த காவலாளி பரிதாப பலி

சென்னை: சோழிங்கநல்லூர் ஜீவன் ராமன் நகரை சேர்ந்த ஜங்கா பகதூர் தாபா (53), செக்யூரிட்டி. இவர், நேற்று பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படியில் தொங்கியபடி பயணித்தபோது, ரயில் புறப்பட்ட சில நொடிகளில் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதைக் கண்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, விரைந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார் ஜங்கா பகதூர் தாபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : guard , train traveled , down the stairs, train fell down, guard, pity
× RELATED காவலர் தற்கொலை