பணிக்கு சேர்ந்த ஒரே நாளில் தொழிலதிபரின் காரை திருடிய டிரைவர் கைது

சென்னை: ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்தவர் வாசுதேவன் (63), தொழிலதிபர். இவருக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள் உள்ளன. இவரிடம், கடந்த 2 நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம் வானூரை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில், வாசுதேவன் தனது காரில் வடபழனியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றார். கார்த்திக் காரை ஓட்டினார். வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க சென்ற வாசுதேவன் திரும்பி வந்து பார்த்தபோது, காருடன் டிரைவர் கார்த்திக் மாயமானது தெரிந்தது.

இதுகுறித்து, வடபழனி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். மேலும், தனது ஐ-போன் காரில் இருப்பதாக தெரிவித்தார். போலீசார், ஐ-போன் சிக்னலை வைத்து காரை பின்தொடர்ந்தனர். அப்போது கார் கல்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நிற்பது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags : businessman ,car driver , businessman, car driver , arrested overnight , work
× RELATED வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல்...