×

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ் அளித்த ஆசிரியர்கள் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

சென்னை: பதவி உயர்வுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் 7 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் சமர்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு வெவ்வேறு நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் பணியாற்றிய 7 ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பான ஆவணங்களை புகார்தாரர்கள் நேற்று வெளியிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 7 பேர், 6வது ஊதியக்கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தில் இருந்து  7வது ஊதியக்குழுவில் சம்பளத்துக்கான பதவி உயர்வு பெற முயன்று வருகின்றனர். இதற்காக அவர்கள் மும்பை ஐஐடியில் 4 வார கால பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதாக சான்றிதழ் சமர்ப்பித்தனர்.

அந்த சான்றிதழின் உண்மைத்தன்மை தொடர்பாக எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அதற்கான விவரங்களை மும்பை ஐஐடியில் கேட்டபோது, அப்படி யாரும் பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் குறிப்பிட்ட 7 பேரின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அண்ணா பல்கலைக்கழகம் எப்போது சரிபார்க்குமா என்ற சந்தேகம் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Teachers ,Anna University Campus College: Order ,Anaca University Campus College , Teachers ,forged certificates, promotion to Anna University Campus College:
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்