×

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 43வது சென்னை புத்தகக் கண்காட்சி : ஜனவரி 9ம் தேதி தொடக்கம்

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 43வது புத்தகக்கண்காட்சி-2020 வரும் ஜனவரி 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். 43வது சென்னை புத்தகக்கண்காட்சி -2020 வரும் ஜனவரி 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை 13 நாட்கள் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் 820க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்க உள்ளனர். இதில் ஒன்றரை கோடி புத்தகங்கள் இடம்பெறுகின்றன. மேலும், தமிழ், ஆங்கிலம், மல்டிமீடியா என தனித்தனி அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாசகர்களை மகிழ்விக்கும் விதமாக தினமும் கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மேடை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, வளரும் இயக்குநர்களை ஊக்குவிக்க குறும்படம், ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்த 43வது சென்னை புத்தகக் கண்காட்சியில் லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி புத்தகப் பிரியர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Madras Book Fair ,Nandanam YMCA Stadium , 43rd Madras Book Fair, Nandanam YMCA Stadium,January 9th
× RELATED ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும்...