×

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு : திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தார். திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை 10 லட்சத்தில் மேம்படுத்தும் பணிக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், கொளத்தூர் நேர்மை நகரில் தொகுதி நிதியில் இருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டப்பட்டு வரும் துணைமின் நிலைய பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, 64வது வார்டுக்குட்பட்ட வினோபா நகர், 65வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் போர்வெல் அமைக்கும் பணி மற்றும் 66வது வார்டுக்கு உட்பட்ட கார்த்திகேயன் சாலையில் தொகுதி நிதியில் இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதி முழுவதும் நடந்து வரும் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பேப்பர் மில்ஸ் சாலையில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணனின் தந்தை சுப்பிரமணி மறைந்ததால், அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சாந்தி நகரில் பூமிநாதன், ஜி.கே.எம். காலனியை சேர்ந்த மோகனின் தந்தை மறைவுக்கும் துக்கம் விசாரித்தார். வெற்றி நகர், வேணுகோபால் நகரில் உள்ள தேவேந்திரன் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். அப்போது, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் மற்றும் திமுகவினர், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags : district ,Kolathur ,MK Stalin , MK Stalin's study, Kolathur district, Beginning of project work
× RELATED ஆன்மீகத்தை வைத்து தில்லுமுல்லு...