×

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் : கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அணி மகத்தான வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினர். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சவுந்தரராசன் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவருடன் கலந்துரையாடினோம். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மாவட்டங்களில் தோழமைக் கட்சிகளுடனான இடப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களிடம் இடப்பகிர்வை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும்.  ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து விடும். ஒன்றிரண்டு இடங்களில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்தால் தலைமையில் பேசிக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் கூறியிருக்கிறார். அதன்படி சுமூகமாக இடப்பகிர்வு முடியும். இதைப்போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தற்போது அரசியல் சூழல் குறித்தும் சந்தித்துப் பேசினர்.

Tags : coalition ,K. Balakrishnan DMK ,body election ,K. Balakrishnan , DMK coalition wins ,local body election,Interview with K. Balakrishnan
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...