×

ரஜினிகாந்த் 70வது பிறந்தநாள் மு.க.ஸ்டாலின், திரையுலகினர் வாழ்த்து

சென்னை: ரஜினிகாந்த் 70வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் ரஜினிக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  70ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல், மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘அன்பர், நண்பர் ரஜினிகாந்துக்கு நல்ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்களை நான்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,  ஹர்பஜன் சிங், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி பிரபு, அருண் விஜய், ராகவா லாரன்ஸ், சூரி, யோகி பாபு, நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, நயன்தாரா, சாய் தன்ஷிகா, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, அட்லி, இசை அமைப்பாளர்கள் டி.இமான், அனிருத் உள்பட பலர் சமூக வலைத்தளங்கள் மற்றும் வீடியோ மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜப்பான், சீனா, கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்கள் கேக் வெட்டி, வீடியோ மூலம் ரஜினியை வாழ்த்தினர். ‘‘பாட்ஷா’’ படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர் வேடத்தில் காக்கிச்சட்டை அணிந்திருந்தது போல், ரசிகர்கள் காக்கிச்சட்டை அணிந்து நடனமாடினர். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீடு முன் ரசிகர்கள் திரண்டு வந்து, பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

Tags : MK Stalin Rajinikanth ,Birthday ,MK Stalin , Rajinikanth's 70th Birthday, MK Stalin
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி