ரஷ்யாவின் விமானம் தாங்கி போர் கப்பலில் தீ விபத்து

மாஸ்கோ: ரஷ்யாவிடம் தற்போதுள்ள ஒரே ஒரு விமானம் தாங்கி போர் கப்பலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ரஷ்யாவிடம் அட்மிரல் குஸ்னெட்சோவ் என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர் கப்பல் மட்டுமே இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு கிரேன் மோதியதால் இந்த போர் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று கப்பலில் திடீரென தீ பற்றியுள்ளது. சுமார் 6,500 சதுர அடி கொண்ட அட்மிரல் குஸ்னெட்சோவ் கப்பலில் 600 சதுர அடிக்கு தீ பரவியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்தின்போது கப்பலில் 400 பேர் பணியில் இருந்துள்ளனர். வெல்டிங் பணிகளில்போது தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் 3 பேரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பலை சீரமைக்கும் பணிகள் 2020ம் ஆண்டு முடியும் என்றும் 2021ம் ஆண்டு முதல் மீண்டும் கடற்படையில் அட்மிரல் குஸ்னெட்சோவ் இணையும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.

Related Stories: