சான்டியாகோ: சிலி நாட்டில் 38 பேருடன் மாயமான ராணுவ விமானத்தின் உடைந்து சிதறிய சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவில் இருந்து 3 ஆயிரம் கிமீ தொலைவில் அமைந்துள்ளது புன்டா ஏரினாஸ் நகரம். இங்கிருந்து கடந்த 9ம் தேதி மாலை 4.53 மணிக்கு சென்ற சிலி ராணுவ விமானம் 38 பேருடன் காணாமல் போனது. பல மணி நேரம் முயன்றும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.