வாஷிங்டனில் 18ம் தேதி இந்தியா-அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையிலான 2வது 2+2 பேச்சுவார்த்தை வாஷிங்டனில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வெளியுறவு, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் 2+2 பேச்சுவார்த்தை, கடந்தாண்டு நவம்பர் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘`இந்தியா - அமெரிக்கா இடையேயான 2வது 2+2 பேச்சுவார்த்தை வாஷிங்டனில் வரும் 18ம் தேதி நடைபெறும். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்,’’ என்றார். மேலும், `அப்போது இரு நாடுகள் இடையே டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தையின் பயனாக இரு நாடுகள் இடையேயான நட்புறவில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

Related Stories: