காதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த குறுக்கத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் திவ்யதர்ஷினி (17). திட்டக்குடி அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தை மணிமாறன் என்பவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இவர் திவ்யதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி அவரை சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.  இதனால் மனமுடைந்த திவ்யதர்ஷினி, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவரிடம் விருத்தாசலம் நீதிமன்ற நீதிபதி மனோகரன் வாக்குமூலம் பெற்றார். அதன்பின், அவர் உயிரிழந்தார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யதர்ஷினிக்கு மணிமாறன் அண்ணன் முறை என்று கூறப்படுகிறது.     

Advertising
Advertising

Related Stories: