பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 12ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். ஒரு மாத பரோல் இன்றுடன் முடிவதால், இன்று மாலைக்குள் வேலூர் சிறைக்கு திரும்ப இருந்தார். இதற்கிடையே அவரது தந்தையின் உடல்நலக்குறைவால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கும் சிறைத்துறைக்கும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>