அரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர்:  வேலூர் அடுத்த இடையஞ்சாத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக குமரன் நெடுஞ்செழியன் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களை தேவையின்றி திட்டி, அடிப்பாராம். கன்னத்தை கிள்ளுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.  பெற்றோர் புகாரின்படி இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி அங்குலட்சுமி விசாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர் மார்சுக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து ஓவிய ஆசிரியர் குமரன் நெடுஞ்செழியனை சஸ்பெண்ட் செய்து, முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Related Stories:

>