ஜார்க்கண்டில் அமைதியாக முடிந்தது 3ம் கட்ட வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், இம்மாதம் 7ம் தேதி 2ம் கட்டத் தேர்தலும் நடந்தது. 3ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  ராஞ்சி, ஹடியா, கான்கே, பார்கதா, ராம்கரில் மாலை 3 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர். கவர்னர் திரோபாடி, முர்மு ராஞ்சி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.

எங்குமே அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. தேர்தல் அமைதியாக நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சாகே, கிஜ்ரி சட்டமன்ற தொகுதியில் வாக்களித்தார். இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர்க் யஷ்வந்த் சின்கா மற்றும் ஜெயந்த் சின்கா ஆகியோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஜார்கண்டில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி நடக்கிறது. 5வது கட்ட வாக்குப்பதிவு 20ம் தேதியும் நடைபெற உள்ளது.

Related Stories: