அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

திஸ்பூர்: அசாமில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த வகையில், அசாமில் நேற்று பந்த் அறிவிப்புகள் ஏதும் இல்லாத நிலையிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன.

திப்ரூகரில் பொதுமக்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். ஜோர்ஹட், கோலாகட், தின்சுகியா, சிவசாகர், நாகோன், போன்கய்கான், சோனிட்பூர் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்துள்ளது. ரயில் மறியல் காரணமாக, 14க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து குவஹாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: