மரம், செடிகள் வளர்வதால் வெள்ளை கேட் மேம்பாலத்தில் விரிசல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மரம் வளர்ந்துள்ளதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் பஸ் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடப்பதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காமல் உள்ளதால் சேதம் அடைந்து வருகிறது. தற்போது பாலத்தில் ஆங்காங்கே அரச மரம், ஆலமரம் வளர்ந்துள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இதை அப்படியே விட்டுவிட்டதால் பாலம் வலுவிழந்து இடிந்துவிழும் ஆபத்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’ மேம்பாலத்தில் மரம், செடிகள் வளர்வதால் பலகீனமாகி வருகிறது. எனவே, அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: