×

பெரம்பலூரில் தொடரும் சம்பவங்களால் விவசாயிகள் கவலை: 400 கிலோ வெங்காயம் கொள்ளை

பெரம்பலூர்: வெங்காயத்திற்கு கடும் தட்டுபாடு நிலவியதால் விலை கிலோ ₹200 வரை விற்பனையானது. இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இருக்குமதி செய்யப்பட்டது. அத்துடன் மழையும் ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கி விட்டதால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்தும் வெங்காய வரத்து சீரடையத்தொடங்கி விட்டது. இதனால் வெங்காயம் விலை குறையத்தொடங்கி விட்டது. ஆனாலும் கிராமங்களில் இன்னும் வெங்காயத்தின் விலை குறையவில்லை. விலை ஏற்றம் என்ற செய்தி கிடைத்தவுடன் கிராமங்களில் மறுநாளே விலை உயர்ந்து விடும். ஆனால் விலை குறைந்தால் மட்டும் கிராமங்களில் பல நாட்கள் கழித்து தான் குறையத்தொடங்கும். சின்ன வெங்காயம் உற்பத்தியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை நல்ல விலை கிடைத்தால் உடனே விற்பனை செய்து விடுவார்கள். விலை கிடைக்காவிட்டால் அறுவடை செய்த வெங்காயத்தை வயலின் ஒரு பகுதியில் சின்ன பரண் அமைத்துஅதில் உலர வைத்து, அதற்கு மேல் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து விடுவார்கள்.இதற்கு வெங்காயபட்டறை என்று பெயர். இப்படி பல மாதங்கள் பட்டறையிலேயே வெங்காயம் பாதுகாப்புடன் இருக்கும். ஆனால் தற்போது வெங்காயம் விலை ஏறியதை தொடர்ந்து பட்டறைகளில் சேமிக்கப்பட்டு இருந்த வெங்காயம் நள்ளிரவில் திருட்டு போவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம கூத்தனூர் விவ சாயி முத்துகிருஷ்ணன் என்பவரது வயலில் பட்டறையில் வைத்திருந்த 300 கிலோ வெங் காயத்தை மர்மநபர்கள் கடந்த வாரம் திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்குணம் கிராமத்தில் 400 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். செங்குணம் கிராமத்தில் நியாய விலைக் கடையருகே வசி த்து வருபவர் சக்திவேல்(33). இவர் 2 ஏக்கர் நிலத் தில் வெங்காயம் பயிரிட்டி ருந்தார். இதனை அறுவடை செய்து வயலில் பட்டறை போட்டிருந்தார். நேற்று முன்தினம்இரவு பட்ட றையின் தென்பகுதியில் 400கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ₹50 ஆயிரமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மர்ம நபர்களால் வெங்கா யம் திருடபடுவதால் வெங் காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவ லையடைந்து வருகின்றனர்.

Tags : Perambalur ,incidents ,events , Perambalur, farmers' concern, onion robbery
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி