×

ஜெ. வாழ்க்கை வரலாறு படமான தலைவி, குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி, குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க முடியாது என ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிப்பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஜெயலிதாவின் உறவினர் என்கிற முறையிலும், அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது உடனிருந்தவர் என்னும் முறையில், தன்னைப் பற்றியும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் அது தன்னுடைய சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் ஜெ.தீபா மனுவில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படும்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் படம் கற்பனையானது என்று அறிவிப்பு வெளியிட தலைவி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : J. ,Queen , J. Biography, Head, Queen, high court
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...