ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த அமெரிக்க தனியார் நிறுவனம்: மகிழ்ச்சி கடலில் மூழ்கிய ஊழியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் என்ற தனியார் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அதில் பங்கேற்ற சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிற கை உறைகள் வழங்கப்பட்டன. அதன் பின் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான், அறிவித்தபடி அந்த உறைகளை பிரிக்க சொன்னார். பின்பு அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் செய்வதறியாது இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த உறைகளில் ஒவ்வொருவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றார் போல போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது.

மிகப்பெரிய போனஸ் தொகையாக 270,000 டாலரும், மிகச்சிறிய தொகையாக 100 டாலரும் அளிக்கப்பட்டிருந்தது. போனஸ் தொகையை மகிச்சியுடன் ஏற்று கொண்டுள்ள ஊழியர்கள் இந்த தொகை தங்களது கடனைத் தீர்க்கவும், தங்கள் குழந்தைகளின் பல்கலைக்கழக கட்டணத்தை செலுத்தவும் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினர். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்நிறுவனம், சுமார் 20 மில்லியன் சதுர அடி அலுவலகம், சில்லறை விற்பனை மற்றும் கிடங்கு இடம் உள்ளிட்டவற்றை 8 மாநிலங்களில் அபிவிருத்தி செய்வதற்கான இலக்கை அடைந்ததன் அடையாளமாகவே கொண்டாட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு போனஸ் வழங்கப்பட்டது என கூறியுள்ளது. இதனால் அங்கிருத்தவரும், ஊழியரும் பெரும் ஆசிரியத்திலும், அதிர்ச்சிலும் ஆழ்ந்தனர்.

Related Stories: