வன்முறையை தூண்டும் விதமான நிகழ்ச்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப கூடாது: மத்திய அரசு சுற்றறிக்கை

புதுடெல்லி: சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தொலைக்காட்சிதான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு. டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைகிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும், தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பபடும் சில நிகழ்ச்சிகளால் மக்கள் மனசில் வன்முறை தூண்டும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், பல்வேறு அசம்பாவிதங்கள், பெரும் போராட்டங்களாக வெடிக்கின்றன.

இந்நிலையில், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; டிவி சேனல்கள் நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். வன்முறையை தூண்டும் விதமாகவோ, நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் விதத்திலான செய்திகளையோ விளம்பரங்களையோ ஒளிபரப்பு செய்ய ஒழுங்குமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதனை சேனல்கள் தவறாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: