கடலோர காவல் குழும போலீசாருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகன பைக் இயக்குதல் பயிற்சி

மணமேல்குடி: மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள டெட்ஸ்கை மீட்பு வாகன பைக்கை இயக்குதல்  குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர காவல் குழுமத்திற்கு டெட் ஸ்கை என்ற மீட்பு வாகன பைக் வழங்கப்பட்டுள்ளது. கடலில்  குளிக்கும்போது பெரிய அலையில் சிக்கி தவிக்கும் நபர்களை மீட்க இந்த பைக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இயக்குவது குறித்த பயிற்சி  மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் நடைபெற்றது. பயிற்சியை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி, மீமிசல் திருப்புனவாசல், சேதுபவாசத்திரம், அதிராம்பட்டினம் ஆகிய கடலோர காவல்  நிலையத்திலிருந்து போலீசார் கலந்து கொண்டனர். பயிற்சியில் மீட்பு வாகன பைக் மூலம் கடலில் சிக்கி தவிப்பவர்களை பைக் மூலம் சென்று  காப்பாற்றுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Coast Guard Police ,Dead Sky Rescue Vehicle ,Coast Guard , Dead Sky, Vehicle, Bike, Coast Guard, Police
× RELATED அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்