கீழப்பழுவூர் அருகே சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்: லாரியை முந்த முயன்றபோது விபத்து

அரியலூர்: கீழப்பழூவூர் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 8 பயணிகள்  காயமடைந்தனர்.அரியலூர் மாவட்டம் சின்னப்பட்டாகாடு கிராமத்தில் இருந்து நேற்று காலை கீழப்பழுவூரை நோக்கி மினி பஸ் வந்தது. இந்த பேருந்தில் 20க்கும்  மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கீழப்பழூவூர் அருகே பேருந்தின் முன் சுண்ணாம்பு கல் ஏற்றி கொண்டு கனரக லாரி சென்றது. கீழப்பழுவூர்  சத்தியாநகர் அருகில் லாரியை மினி பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர  பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த சுசிலா (37), வேம்பு (40), கலைவாணி (25) மற்றும் கருப்பிலாக்கட்டளை  கிராமத்தை சேர்ந்த தமிழரசி (35) உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழப்பழுர் போலீசார் வழக்குப்பதிந்து மினிபஸ் டிரைவர்  மற்றும் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: