வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி..: அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து?

மும்பை: வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்றும் வரும் போராட்டம் எதிரொலியாக அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளல் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வன்முறையை தடுப்பதற்காக துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி, திப்ருகர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், இன்றும் நாளையும் கவுகாத்தி, திப்ருகர் நகரங்களுக்கான விமான சேவையை பல்வேறு விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. பல்வேறு இடங்களில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய, பிசிசிஐ கிரிக்கெட் நடவடிக்கைகளின் பொது மேலாளர், கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என மாநில கிரிக்கெட் சங்கம் அறிவியுறுத்தியுள்ளதாகவும், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் ஹோட்டலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூறியுள்ள அவர், இரு மாநிலங்களில் நிலவும் நிலையை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். எனவே, குறித்த நாளில் போட்டிகள் அல்லது, போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுமா என குழப்பம் நிலவி வருகிறது.

Related Stories: