இலக்கு முடிந்து 3 மாதம் கடந்து விட்டது கொக்கிரகுளம் புதியபாலம் நிறைவுப் பணி தாமதம்: நெரிசலை தவிர்க்க விரைந்து முடிக்கப்படுமா?

நெல்லை:  நெல்லை-பாளை  இரட்டை மாநகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆறு சுலோச்சனா முதலியார் பாலம் 177 ஆண்டுகளைக்  கடந்து பழமையாகி விட்டது. இதில் போக்குவரத்து நெரிசல்  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே   தொடங்கி திருவனந்தபுரம் சாலை முழுவதும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள்  அதிகரித்துள்ளன.இதனையடுத்து சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு இணையாக  மற்ெறாறு பாலம் அமைத்து ஒருவழிப்பாலங்களாக பயன்படுத்தவும் பாலத்தின்   இணைப்பு பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.  மேலும் அருகே உள்ள பலாப்பழ ஓடை பாலத்தையும் விரிவாக்கம்  செய்ய திட்டமிடப்பட்டது.  இதற்காக ரூ.16.5 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 2018ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின.

தாமிரபரணி இரு கரைகளையும் பாலம்  தொடும் வகையில் 10 தூண்கள், 11 சிலாப்புகளுடன் பாலம் அமைக்கும் பணி  மும்முரமாக நடந்தது.  இந்தபாலத்தின் நீளம் 220 மீட்டர் ஆகும். அகலம் 14.8  மீட்டராக உள்ளது. தற்போது பாலத்தின்  பணிகள் முடிந்து விட்டன. இதனால் பாலத்தின்  பக்கவாட்டு பாதுகாப்பு சுவர்களில் ள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தின் இருபகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கும் பணி மந்தமாக  நடக்கிறது.   அரவிந்த் மருத்துவமனை எதிரே பாலம் இணையும் இடத்தில் புதிய சாலை அமைக்க மண் நிரப்பி புதிய சாலை அமைப்பதற்கான  பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக அப்பகுதியில் 3 கட்டிடங்களை அகற்றியுள்ளனர்.  மேலும் பலாப்பழ ஓடை பாலம்  விரிவாக்கப்பணியும்  அதையொட்டி அறிவியல் மையம் அருகே அண்ணாசாலை இணைப்பு பணியும் நடக்கிறது.

கொக்கிரகுளம் அறிவியல் மையம் முன்பகுதியில்  இருந்து எதிரே உள்ள பஸ் நிறுத்தம் வரை 14 மீட்டர் அளவிற்கு சாலை  அகலமாகிறது. அதற்காக  இங்கு இருந்த ஒரு பஸ் நிறுத்தம் மணிக்கூண்டு உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப்பகுதியிலும் தற்போது பணிகள் நடக்கின்றன. பலாப்பழ  ஓடைப்பாலம் அருகே மற்றொறு சிறிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் மின்விளக்குகளை பொருத்துவது குறித்து பொதுப்பணித்துறையின்  மின் இணைப்பு குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்களும் மின் கம்பங்களை புதிய பாலத்தில் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள  உள்ளனர்.இந்தப்பாலத்தை கடந்த செப்டம்பர் மாதமே கட்டி முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாலம் பணி முடிந்த நிலையில் இணைப்பு சாலை   விரிவாக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது. இடையில் மழைக்காலம் வந்ததால் மேலும் தாமதம் ஏற்பட்டது. எனவே இனியும் தாமதமின்றி இணைப்பு  சாலைகளை இரவு பகலாக விரிவாக்கம் செய்து விரைவில் பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இந்த பாலம் திறக்கப்பட்டால் எம்ஜிஆர் சிலை அருகிலும் அரவிந்த் கண் மருத்துவமனை, தேவர் சிலை அருகிலும் போக்குவரத்து நெரிசல் சற்று  குறையும் என்பதால் மேலும் காலதாமதப்படுத்தாமல் இப்பணியை விரைந்து முடித்து பாலத்தை திறக்கவேண்டும் என பொதுமக்கள்  எதிர்பார்க்கின்றனர்.இந்த பாலம் திறக்கப்பட்டால் எம்ஜிஆர் சிலை அருகிலும் அரவிந்த் கண் மருத்துவமனை, தேவர் சிலை அருகிலும் போக்குவரத்து  நெரிசல் சற்று குறையும்

Related Stories: