×

பிளாஸ்டிக் குப்பைகளால் அழியும் நண்டுகள்

பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் குப்பைகளால் நண்டு இனங்களில் ஒன்றான துறவி நண்டு அழிவைச் சந்தித்து உள்ளன என பிரிட்டனின் தேசிய வரலாற்று மியூசியம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டினைச்சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால், துறவி நண்டுகள் பாதிக்கப்படுகின்றன. 5 லட்சத்து 70 ஆயிரம் துறவி நண்டுகள் இறந்து விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



Tags : Crabs , Plastic, litter, perishable, crabs
× RELATED கோடியக்கரையில் சீசன் களைகட்டியது:...