×

கண்ணாமூச்சி ஆடும் ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனை

சென்னை: நேற்று தங்கத்தின் விலை சற்றே சரிந்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (டிசம்பர் 12) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு 12 ரூபாய் குறைந்து 3,609 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, ரூ.3,771க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,216 ரூபாயிலிருந்து இன்று 30,312 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி  தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 46.60 ரூபாயிலிருந்து 47 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 46,600 ரூபாயிலிருந்து 400 ரூபாய் உயர்ந்து 47,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.



Tags : Chennai , Chennai, gold price, silver
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...