ரோபோக்கள், எந்திரங்களின் பயன்பாட்டினால் நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிக்கும் : இஸ்ரேல் ஆய்வாளர் எச்சரிக்கை

உலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை வீழ்ச்சி அடையப் போவதாக இஸ்ரேல் பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.இஸ்ரேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ரோய் ட்ரெசானா விடுத்துள்ள ஆய்வறிக்கையில், ‘ரோபோக்கள் மற்றும் எந்திரங்களின் பயன்பாட்டால் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவானாலும், ரோபோக்கள் மற்றும் எந்திரங்கள் பயன்பாடுகளினால் மனிதர்கள் வேலை வாய்ப்புகள் பறிபோவதை தடுக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையில் வெறும் 10 சதவீத மனிதர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.இம்மாதிரியான எந்திர பயன்பாட்டினால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்’ என ரோய் தெரிவித்துள்ளார்.

Related Stories: