×

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசர்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசரின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் உள்ள நகரான எல் கலாஃபெட்டா என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நுலோஷியன் கிளாஸியரிஸ் என்ற டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த விலங்கு நீண்ட கழுத்துடன் சுமார் 82 அடி நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இதேபோல் ஐஸாஸிகர்ஸர் சான்டகுரூசன்ஸிஸ் என்ற மற்றொரு டைனோசரின் புதைபடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 13 அடி நீளமுள்ள இந்த டைனேசரின் முழுமையான எலும்புகள் தற்போதுதான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Argentina , Argentina, fossils, El Calafeta, dinosaur
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன்