×

திருச்சியில் சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியவருக்கு 15 நாள் சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: ஆபாச படம் விவகாரத்தில் தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளை ஆபாச படம் எடுத்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி காஜாப்பேட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ். ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்துள்ள இவர் நாகர்கோவிலில் பணியாற்றி வந்தவராவார். இவர் கடந்த சில மாதங்களாக சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை  பதிவிறக்கம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதற்காக தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என 15 பேர் கொண்ட வாட்ஸ் ஆப் குழுக்களை அமைத்து இவர் இச்செயலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தலின் படி சிறுமிகளின் ஆபாச படங்களை எடுப்பவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில் கிறிஸ்டோபர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் நிலவன், ஆதவன் உள்ளிட்ட பெயர்களில் பேஸ்புக்கில் ஆபாச படங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கிறிஸ்டோபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை கண்டறிந்துள்ளனர். அதன்பிறகு இவரை தீவிரமாக கண்காணித்தபோது அவருடைய சமூக வலைத்தளம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருடைய முகநூலில் ஆபாச படங்கள் வைத்திருந்ததன் அடிப்படையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது 13, 14, 15 போக்சோ சட்டம் மற்றும் 67 ஏ.ஐ.டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கானது பதியப்பட்டுள்ளது. தற்போது அவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். திருச்சியில் தான் குழந்தை ஆபாச படங்கள் அதிகளவில் பார்க்கப்படுவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆபாச படம் பகிர்ந்த கிறிஸ்டோபரின் சமூக வலைதள தொடர்பில் 150 பேர் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமிகள் ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றியது தொடர்பாக கிறிஸ்டோபரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் அல்பேன்சை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : girls ,Trichy Trichy , Trichy, girl, porn video, social network, arrested
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்