ஜார்க்கண்டில் 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: இளம் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்...பிரதமர் மோடி வேண்டுகோள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று 3 கட்ட தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் பாஜக  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக  இந்த தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல்  ஆர்வத்துடன் பொதுமக்கள் நிண்ட வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் உள்ளனர். 17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 40,000 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.3-வது கட்ட வாக்குப்பதிவுக்காக பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும்  காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, சத்ருகன் சின்கா ஆகியோரும் பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இன்றைய 3-ம் கட்ட தேர்தல் ஜார்க்கண்ட் மாணவர் அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் அந்த அமைப்பு 14 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த மாணவர் அமைப்பு 2014 தேர்தலில் 8 தொகுதிகளில்  போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது. தற்போது 52 தொகுதிகளில் களத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான  காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன.

பிரதமர் மோடி டுவிட்:

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 3 ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்.  குறிப்பாக இளம் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: