கஞ்சா விற்ற பெண் உள்பட 13 பேருக்கு குண்டாஸ்

சென்னை: கஞ்சா விற்பனை ெசய்த பெண் உள்பட 13 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கோடம்பாக்கம் 6வது தெருவை சேர்ந்த கொலை குற்றவாளி அரவிந்தன் (26), கஞ்சா விற்பனை செய்து வந்த மேட்டுக்குப்பம் சூளைமா நகரை சேர்ந்த சிதம்பரம் (26), ஜோதி (எ) நாகஜோதி (25), திருவொற்றியூர் பட்டினாத்தார் கோயில் தெருவை சேர்ந்த ராஜா (எ) குள்ளா ராஜா (35), சுதாகர் (எ) ஜிலோ சுதாகர் (26), மணலி முல்லை நகரை சேர்ந்த உதயகுமார் (எ) கருப்பு உதயா (32), அடிதடி வழக்கில் தொடர்புடைய பாடிக்குப்பம் பெரியார் நகரை சேர்ந்த சுந்தர் (22), திருட்டு வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்ய ஜான்பாஸ்கோ (34), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூர் குப்பம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த அங்கப்பன் (எ) ராம்குமார் (25), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய கணபதி (23), திருமங்கலம் பெரியார் ெதருவை சேர்ந்த முரளி (36), அருணாச்சலம் (எ) அருணா (24) மற்றும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருமங்கலம் வண்டியம்மன் கோயில் தெரு, பாடிகுப்பத்தை சேர்ந்த அருணாச்சலம் (எ) அருணா (24) ஆகிய 13 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: