ஆவடி மாநகராட்சியில் 400 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அதனை வைத்திருந்த 20 கடைகளுக்கு ₹15 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்ய ஆவடி மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர் மோகன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜாபர், எஸ்.பிரகாஷ், ரவிச்சந்திரன், ஜி.பிரகாஷ், நாகராஜ் உள்ளிட்டோர் ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் நேற்று காலை முதல் மாலை வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நேரு பஜார், புதிய ராணுவ சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை, சோழம்பேடு சாலை ஆகிய இடங்களில் உள்ள துணி கடைகள், மளிகை கடைகள் மற்றும் பேக்கரி கடைகள் ஆகியவற்றில் நடந்தது. அப்போது பைகள், கப்புகள் உள்ளிட்ட 400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 20 கடைகளுக்கு ₹15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: