கார்த்திகை தீபத்துக்கு பட்டாசு வெடித்தபோது விபத்து 30 கோழிகள், 2 ஆடுகள் கருகின

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கார்கில் நகர் முகுந்தன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). கடந்த 20 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

அப்போது செல்வம் வைத்திருந்த வைக்கோல் போரில் தீப்பொறி பட்டதில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மாட்டுக்கொட்டகை தீப்பிடித்தது. தகவலறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 30 கோழிகள், 2  ஆடுகள் தீயில் கருகி பலியாகின. மேலும் 13 மாடு, சில கன்று குட்டிகள் தீக்காயம் அடைந்தன. இது தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயம் அடைந்த கால்நடைகளுக்கு  கால்நடைத்துறை மருத்துவர்கள் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Karthik , fireworks exploded , Karthik fire, 30 chickens ,2 goats roared
× RELATED தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு